அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் சிறந்த வேளாண் நடைமுறைகள் பண்ணை பள்ளி பயிற்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுக்கா போர்குடி கிராமத்தில் நடைபெற்றது. இப் பயிற்சியில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறிப்பாக நெற் பயிரை தாக்கிய குலை நோய் அதிகம் தென்பட்டது.குலை நோய் என்பது நெல் பயிரைத் தாக்கும் ஒரு பூஞ்சை நோயாகும், இது இலைகள், கணுக்கள், கழுத்துப் பகுதி மற்றும் கதிர்களில் வெண்மை-சாம்பல் நிற மையத்துடன் கூடிய கண் வடிவப் புள்ளிகளை ஏற்படுத்துகிறது.
இதனால் பயிர்கள் கருகி, சாய்ந்துவிடுகின்றனஇது அதிக ஈரப்பதம்,மேகம் சூழ்ந்த வான மூட்டம், விட்டு விட்டு தூறல், காற்றில் அதிக ஈரப்பதம், குறைவான இரவு நேர வெப்பநிலை மற்றும் அதிக யூரியா பயன்பாட்டால் இந்நோய் பரவ ஏற்ற நிலைகளாகும். இந்நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு சூடோமோனஸ் 0.5 சதம் கரைசலை லிட்டருக்கு ஐந்து கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாள்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொருத்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டா் புளித்த தயிரைக் கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரிக்கும்.இந்த நோய்த் தாக்குதல் தீவிரமாக இருந்தால் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டயிள்யூ.பி -200 கிராம் ரசாயன மருந்து 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவசாயிகளுக்கு சூடோமோனாஸ்,டிரைக்கோடெர்மா விரிடி போன்ற இடுப்பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வயல்வெளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளான மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்துதல், இன கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், வரப்பு பயிர் உளுந்து ஆகியவை செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் இப்பண்ணைப் பள்ளி பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சிவபிரியதர்ஷினி, துணை வேளாண்மை அலுவலர் மனோஜ் குமார்,வேளாண்மை பயிற்றுனர் சீனிவாசன்,அட்மா திட்ட பணியாளர்கள் சூர்யா,சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் G.S.ராஜ்குமார்

0 Comments