பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

 


பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் 3 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் இருப்பார். 6 உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.நடராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.எஸ்.ராஜசேகர், ஏ.பி.மகாபாரதி, கே.மேக்ராஜ், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பி.மதியழகன், நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.பி.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தப் பதவியில் 3 ஆண்டு காலம் இருப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments