திருச்சி: பராமரிப்பு பணிக்காக வந்த வந்தே பாரத் ரெயிலை பூஜை செய்து வரவேற்பு

 


திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகளை பழுது நீக்கும் பணி மற்றும் ஊட்டி மலை ரெயில் என்ஜின்கள் தயாரிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிமனைக்கு முதன்முறையாக 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில், தற்போது பராமரிப்பு பணிக்காக இந்த பணிமனைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து பொன்மலை ெரயில்வே பணிமனையின் அதிகாரிகள், தொழிலாளர்கள் பூஜை போட்டு அந்த ரெயிலை வரவேற்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்தே பாரத் ரெயிலில் பராமரிப்பு பணி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments