பினாமி மூலம் சொத்துக்களை வாங்கி குவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்...... விவரங்களை வெளியிட்ட சவுக்கு சங்கர் கைது

 


பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார்.

இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.

அதேவேளை, சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது இன்று செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments