திருவள்ளூர்: உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்..... நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது


 தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவுப்படி  ஓ எச் டி இயக்குனர்களுக்கு 14,593/- , தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு 12,593/- , டி பி சி பணியாளர்களுக்கு 15,593 ரூபாயை ஊதியமாக வழங்க வேண்டும், அரசாணை 2561- படி கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து. பணிபுரிந்த ஊழியர்களுக்கு அறிவித்தபடி  15 ஆயிரம் சிறப்பு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பிய உள்ளாட்சி ஊழியர்கள் தமிழக அரசு உடனடியாக தொழிற்சங்கத்தினரை அழைத்து கோரிக்கை தொடர்பாக சமூக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர், தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments