தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் அணி சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீர்ப்பை அமல்படுத்தாத அதிகாரிகள் மற்றும் திமுக அரசை கண்டித்தும், நீதிபதியின் தீர்ப்பு குறித்து விமர்சிக்கும் நபர்களை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்ட பாரதியார் ஜனதா கட்சி வழக்கறிஞர் அணியை சேர்ந்த வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்கிற சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பை மதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.


0 Comments