வேலூர்: தடைசெய்யப்பட்ட போதை பொருள்,வெளிமாநில மதுபான விற்பனை படுஜோர்..... கண்டுகொள்ளாத காவல்துறை.?


வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கண் மருத்துவமனை அருகாமையில் கடை நடத்தி வரும் நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற பொருட்களை மிகவும் ஜோராக விற்பனை செய்கிறார்.அது மட்டும் இன்றி அண்டை மாநிலமான பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை அவர் அதிக லாபத்திற்கு விற்று வருகிறார்.தமிழக அரசு மதியம் 12 மணிக்கு தான் மதுபானங்கள் விற்க வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வந்தார்கள்.ஆனால் அதிகாலையில் இருந்து விற்பனையோ ஜோராக நடக்கிறது.

 பெயருக்கு ஹோட்டல் ஆனால் அவர்களோ அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை தான் அதிகம். இதனால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு வருபவர்களும்,கல்லூரி மாணவர்களும் காலை நேரத்திலே மதுபானங்கள் வாங்கிக் கொண்டும் போதை வஸ்துக்கள் வாங்கிக் கொண்டும் சென்று செல்கிறார்கள். தடுக்க வேண்டிய காவல்துறை ஏன் இவர்கள் மீது தடுக்கவில்லை அல்லது மாதந்தோறும் கனிசமான தொகைய பெறுவதால் தடுக்கவில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பூனைக்கு யார் தான் மணி கட்டுவது. ஆம் நாம் செய்தி வாயிலாக நாம் கட்டுவோம் அரசாங்கத்திடம் சொல்லுவோம் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

செய்தியாளர் மதன்

Post a Comment

0 Comments