தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, மின் சிக்கன வார விழா கொண்டாட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மின் பகிர்மான வட்டத்தில் வருடா வருடம் டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் டிசம்பர் 20 ம் தேதி வரை மின் சிக்கன மற்றும் சேமிப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மின்சார சிக்கன வார விழாவினை முன்னிட்டு, தேனி மின் பகிர்மான வட்டத்தில் ஆற்றல் மன்ற குழுவில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடையே மின்சார சிக்கனத்தை மையமாக வைத்து பல்வேறு போட்டிகளை குறிப்பாக ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தி அறிக்கை அனுப்புமாறு கல்வித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில், 30 பள்ளிகளில் போட்டிகள் நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது அப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் விழா நடைபெறும் தினத்தில் வழங்கப்படும் எனவும், மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் மின்சார சிக்கனத்தை கடைப்பிடித்து மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் சிக்கன வார விழா நிகழ்வின் மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments