திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில் எம்.அமித்குமார் என்பவரது இ -சேவை மையம் புதியதாக நிறுவப்பட்டது. இந்த இ-சேவை மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு செயலாளர் ப.அலெக்சாண்டர் வரவேற்பு அளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழகச் செயலாளர் க.சு.தமிழ்உதயன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இ சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இ சேவை மையத்தில் விதவை பென்ஷன், முதியவர் பென்ஷன், மாற்றுத்திறனாளி ஊக்கத்தொகை பெறுவதற்கான பதிவுகள் இலவசமாக செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் குழு தலைவர் மீ.வி. கோதண்டம், தலைமைக் கழக வழக்கறிஞர் மீஞ்சூர் ஏ.கே. சுரேஷ், முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா. மோகன்ராஜ் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு தலைவர் ஏ.சி. ராஜேந்திரன், மீஞ்சூர் காங்கிரஸ் நகரத் தலைவர் எஸ். அன்பரசு, மீஞ்சூர் கதிர்வேல், அபூபக்கர், ரஜினி, தன்ராஜ், மணிமாறன், வல்லூர் பா.து.தமிழரசன், சுகுமார், வழக்கறிஞர்கள் சிற்றரசு, எம்.டி.சுதாகர், அனஸ், முப்புராஜ் ,ரியாஸ் அகமது, திருப்பதி, ஜமாத் தலைவர் அக்பர், ஜோதி, வேல்ராஜ் , ஆண்ட்ரூஸ், விமல் ,சமித் ,அனிபா, ஆஸ்கர் பாய், பாபு என்ற அஜிஸ், சாயின்ஷா, நாகேந்திரகுமார்,அன்சாரி , நெய்தவாயல் வினோத் ,தேவராஜ், பிரபு, முரளி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments