அறந்தாங்கி அரசு கல்லூரியில் திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெற்றது


ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உயர்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்,  திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். போட்டியில் கல்லூரி அனைத்துத் துறை ச மாணவ, மாணவியர் அடங்கிய 12 அணிகள் பங்கேற்றன.

தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார், வினாடி வினா போட்டியை நடத்தினார்.திருக்குறள் பொது வினாக்கள் சுற்று,, மனப்பாடப்பகுதி சுற்று, காட்சியும் கருத்தும் சுற்று என மூன்று சுற்றுகளில் போட்டி நடைபெற்றது. 

போட்டியின் முடிவில்,  தமிழ் முதலாம் ஆண்டு மாணவியர் அப்ரின், கார்த்தியாயினி அணியினர், முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு தமிழ் மாணவர்கள் முகம்மது சபுர்தீன், ராகவன் அணியினர் இரண்டாம் இடத்தையும்,  தமிழ் முதலாம் ஆண்டு மாணவர்கள் அருண், தீபக் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் ப.ஜெரோம், து.நந்தினி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்துறைப்பேராசிரியை முனைவர் சி.மேனகா மதிப்பீட்டாளராகப் பணியாற்றினார்.

தமிழ்த்துறைத்தலைவரும், திருக்குறள் அறிவுசார் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கா. காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாகத் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் மு.முரளி நன்றி கூறினார். போட்டி ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.










Post a Comment

0 Comments