தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.? வைரலாகும் புகைப்படம்

 


தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து இன்னும் பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக செய்திகள் வெளிவந்தது. ஏற்கனவே பல அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வரும் நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக கூறப்படுகிறது.

இதேபோன்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகியான ராஜ்மோகனை மாபா பாண்டியராஜன் சந்தித்து பேசிய நிலையில் இருவரும் கைகுலுக்கியபடி நிற்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. ஏற்கனவே திமுகவில் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக வெளிவரும் செய்திகள் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments