தவெக பொன்னேரி தொகுதி அலுவலகத்தை மாவட்ட செயலாளர் எஸ்.விஜயகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026 சட்டமன்றத் பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள த.வெ.க.தலைவர் விஜய் அண்மையில் உத்தரவிட்டிருந்தார் அதன்படி பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் அறிவுறுத்தல் படி திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதியில் தேர்தல் பணிகள் மேற்கொள்ள புதிய அலுவலகம் திறப்பு விழா மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் விஜயகுமார் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பரிக்கப்பட்டு பரத், லட்சுமிபுரம் சதீஷ் ,வேண்பாக்கம் மதன் , அத்திப்பட்டு முரளி,மெதூர் ஜெய், பழவேற்காடு சலீம், வடக்கு நல்லூர் சந்தோஷ் குமார், பொன்னேரி வழக்கறிஞர் அஸ்லாம், கோபி, நரேஷ் சேகர் யுவராஜ் ராஜன் விக்கி ஆரணி அருண் வழுதலம்மேடு  அபிஷேக் கொண்டகரை பிரபு பட்டமந்திரி சசி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments