திருவள்ளூர்: அனுப்பம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் இறுதிக்கட்ட படிவம் நிரப்பும் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் இறுதி கட்ட படிவம் நிரப்பும் கூட்டம் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அனுப்பம்பட்டு-1 கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். 

இடம் பெயர்ந்த வாக்காளர்களை பட்டியலில் சரிபார்த்தல், இறந்து போன வாக்காளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை இக்கூட்டத்தில் கட்சி பிரமுகர்களால் அடையாளம் காணப்பட்டு கையொப்பமிடப்பட்டது. அதிமுக சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் எனும் உமா மகேஸ்வரன், திமுக சார்பில் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்,வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments