அரியலூர்: ஜி.கே.மணியை நீக்கியதால் பாட்டாளி மக்கள் கட்சி புனிதம் அடைந்துள்ளது..... ஜெயங்கொண்டத்தில் பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி.....



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் அளித்த பேட்டியில்:

ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணியை அன்புமணி ராமதாஸ் நீக்கியுள்ளார். 

இதன் மூலம் பாமக கட்சி புனிதமடைந்துள்ளது. தொண்டர்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறி உள்ளது.திமுக சொன்ன வேலையை முறையாக செய்து முடித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு அதன் மூலம் தற்போது பயனடைந்துள்ளார். 

தமிழ்நாட்டில் மணமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து உள்ளதை மூடக்கோரி பொதுநல வழக்கு ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர உள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.பேட்டியின் போது பாமக மாநில அமைப்பு செயலாளர் டிஎம்டி.திருமாவளவன், அரியலூர் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளைக் கழக பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments