தமிழ்நாடு திறன் போட்டி 2025" சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மதர் ஞானம்மா கல்லூரி மாணவி அர்ஷியாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கினார்


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன் பேட்டை, மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயிலும் மாணவி அர்ஷியா மாவட்ட அளவில் நடைபெற்ற  "தமிழ்நாடு திறன் போட்டி_ 2025"  இல் "அழகு பராமரிப்பு கலை"  திறன் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில்  முதலிடம் பெற்றார்.


 அதன் பிறகு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவி அர்ஷியாவுக்கு தமிழ்நாடு துணை  முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  முதல் பரிசாக ரூ.10 000 ஆயிரம் மற்றும் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மேலும்  தேசிய அளவில் நடைபெற இருக்கும் திறன் போட்டியில் பங்கு பெறவும் தேர்வாகியுள்ளார். திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அர்ஷியாவை கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக கல்லூரியின் செயலர் அருள் சகோதரி .ஜோசப் ராஜேஸ்வரி  வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments