தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், முதலக்கம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஊராட்சி செயலர் வீரபத்திரன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மகேந்திரன் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். மேலும், மகளிர் திட்ட அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
சாலை விரிவாக்கம் & குடிநீர் குழாய் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் மேல்மங்கலம் - வைகைபுதூர் சாலை விரிவாக்கப் பணியின் போது, சேதமடையும் குடிநீர் குழாய்களை ஒப்பந்ததாரர்களே போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வைகைப்புதூர் குடிநீர் திட்டம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வடுகபட்டிக்கு வைகை அணை பிக்கப் அணையிலிருந்து கொண்டு செல்லப்படும் புதிய குடிநீர் திட்டத்தில், வைகைப்புதூர் கிராமத்திற்கு எனத் தனியாக ஒரு குடிநீர் இணைப்பை (Dedicated Line) அமைத்துத் தர வேண்டும் என மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 Comments