பெரியகுளம் தென்கரை, வடகரை கிளை நூலகங்களில் 77வது குடியரசு தின விழா

   


                 

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை  நூற்றாண்டு நூலக வளாகத்தில்,நல் நூலகர் விசுவாசம் தலைமையில், தென்கரை வாசகர் வட்டத் தலைவர் மு.அன்புக்கரசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், வடகரை வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி.கே. மணி கார்த்திக் முன்னிலை வகித்தார். நூலக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியகுளம் வடகரை நூலகத்தில் நாட்டின் 77 வது குடியரசு தின விழா நல் நூலகர் குமரன் தலைமையில், வடகரை வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் ஜி. கே. மணி கார்த்திக் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில், தென்கரை நூலக வாசகர் வட்ட தலைவர் மு. அன்புக்கரசன் முன்னிலை வகித்தார். நூலக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments