அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள APN ஜவுளி கடையின் சார்பில் உரிமையாளர் சுதாகரின் அறிவுறுத்தலோடு உலக சர்வதேச வேட்டிகள் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணி ஜெயங்கொண்டம் அண்ணா சாலையில் இருந்து நான்கு ரோடு சிதம்பரம் சாலை வழியாக சென்று மீண்டும் APN ஜவுளி கடையை வந்தடைந்தது.இந்த பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர்கள் வேஷ்டி சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.



0 Comments