புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாளை (04.01.2026) மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களது வருகையை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக நாளை (04.01.2026) கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திருக்கோகர்ணம் காவல் நிலையம் முதல் கருவேப்பிலான் ரயில்வே கேட் வரை எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை
மதியம் 01.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை கருவேப்பிலான் ரயில்வே கேட்டிலிருந்து மாத்தூர் ரவுண்டானா வரை திருச்சி சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.
1. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் அனைத்து பயணிகள் பேருந்துகள்:
பஞ்சப்பூர், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், கட்டியாவயல், திருவப்பூர் ரயில்வே கேட் வழியாக புதுக்கோட்டையை சென்றடையவும் மேலும் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் பேருந்தும் இதே வழியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. திருச்சியிலிருந்து கீரனூர் மற்றும் கீரனூரிலிருந்து திருச்சி செல்லும் நகர பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும்:
பஞ்சப்பூர், பரணி ஹோட்டல் ஜங்சன், சூரியூர் 4-ரோடு, சின்ன சூரியூர், பெரிய சூரியூர், கிள்ளுக்கோட்டை ரோடு வழியாக கீரனூர் செல்ல வேண்டும்.
3. கீரனூரிலிருந்து புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும்:
புத்தாம்பூர். கீரனூர், குன்னன்டார்கோவில் 4-ரோடு, அண்டகுளம், செம்பாட்டூர், தர்கா, மச்சுவாடி வழியாக செல்ல வேண்டும்.
4. தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து வாகனங்களும்:
முள்ளூர், மருத்துவக் கல்லூரி, அண்டகுளம் விளக்கு, மச்சுவாடி வழியாக செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாளை (04.01.2026) மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களது வருகையை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக நாளை (04.01.2026) மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் கீழ்கண்ட பாதையில் செல்லுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
1.திருச்சி சாலையிலிருந்து வரும் வாகனங்கள்:
பஞ்சப்பூர், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், கட்டியாவயல், திருவப்பூர் ரயில்வே கேட் வழியாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பார்க்கிங் செல்ல வேண்டும்.
2.தஞ்சை சாலையிலிருந்து வரும் வாகனங்கள்:
முள்ளூர், மருத்துவக் கல்லூரி, மச்சுவாடி, பிருந்தாவனம், பால்பண்ணை, மியூசியம் வழியாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பார்க்கிங் செல்ல வேண்டும்.
3. ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி மார்க்கமாக வரும் வாகனங்கள்:
PLA மேட்டுப்பட்டி, TVS Corner, பிச்சத்தான்பட்டி ரவுண்டானா, KKC, ரவுண்டானா, மியூசியம் வழியாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பார்க்கிங் செல்ல வேண்டும்.
4. திருமயம் வழியாக வரும் வாகனங்கள்:
நமணசமுத்திரம், மாலையீடு, KKC, PLA ரவுண்டானா, மியூசியம் வழியாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பார்க்கிங் செல்ல வேண்டும்.

0 Comments