அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு வழியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி முனைவர் சௌமியா அன்புமணி குன்னத்தில் நடைபெறவுள்ள உரிமை மீட்பு நடைபயணம் நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோடு வழியாக குன்னம் செல்கிறார். அவரை வரவேற்கும் விதமான ஜெயங்கொண்டம் பாட்டாளி மக்கள் கட்சி நகர சார்பில் நகர செயலாளர் மாதவன் தேவா தலைமையில் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு மற்றும் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில இணை பொதுச் செயலாளர் க வைத்தி, மற்றும் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன், நகர தலைவர் அழகுதுரை, நகர வன்னியர் சங்க செயலாளர் சிற்றரசன், மாவட்ட அமைப்பு செயலாளர் தில்லை ராஜன், உள்ளிட்ட 200 மேற்பட்டோர் மலர் தூவி பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட , ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அணி பொறுப்பாளர்கள்,ஜெயங்கொண்டம் நகர பொறுப்பாளர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.


0 Comments