ஈரோடு: பொலவக்காளிபாளையம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்


ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் ஒன்றிய  செயலாளர்  கோரக் காட்டூர் ரவீந்திரன் ,ஒன்றிய  அவைத்தலைவர்  முத்துசாமி ,  மோகன்,  பிரவின் , அமராவதி கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



Post a Comment

0 Comments