தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சாதனை..... எஸ்.பி பாராட்டு


தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஜி. சிவசங்கர பாண்டியன் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார்.

இவர், தேனி மாவட்டம், கூடலூர் N.S.K. பொன்னையா  கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற சாதனை முயற்சியில் ஒவ்வொரு காலிலும் 500 கிராம் மணல் பையை இணைத்து, ஒரு நிமிடத்தில் 192 ஜாகர் ஸ்கிப்ஸ் செய்து சாதனையை நிகழ்த்தினார்.

இந்த சிறப்பான சாதனை நிகழ்த்தியதை முன்னிட்டு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சினேஹாப்ரியா அவர்களை  நேரில் சந்தித்து, அவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.

Post a Comment

0 Comments