மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் தேனி மாவட்டத்தின் சார்பில் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிறுவனத் தலைவர் ஐயா வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் தினேஷ் அவர்கள் ஒருங்கிணைப்பில் மலைவாழ் மக்களுடன் உப்புத்துறை ஜெ ஜெ நகர் காலனியில் புத்தாண்டு தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அன்னதானம் மற்றும் 2026 - ம் வருட புத்தாண்டு காலண்டர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. உடன் அனைத்து முன்னணி நிர்வாகிகளான இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன் நகர செயலாளர் அருள் பாண்டி சின்னமனூர் ஒன்றிய செயலாளர் இளையராஜா சொக்க ராம்துரை கணேசன் பார்த்திபன் பிரகாஷ் வழக்கறிஞர் செல்வ பிரியா வழக்கறிஞர் புவனா வழக்கறிஞர் புனிதா விமலா அருள்கனி தேஜாஸ்ரீ கபிஷா பாண்டியம்மாள் பூங்கொடி மல்லிகா மலைவாழ் மக்கள் தலைவர் வேல்சாமி மற்றும் உப்புத்துறை ஜெ ஜெ நகர் காலனி மலைவாழ் மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.



0 Comments