தேனி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா


தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா, வரும் பிப்ரவரி 15 முதல் 19ம் தேதி வரையும், 22 ஆம் தேதி மறு பள்ளயம் வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் விழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கனகராஜ் பாண்டியன், தனராஜ் பாண்டியன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இந்த விழாவின் போது, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments