ஈரோடு மாவட்டம், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஸ்ரீ வேலவன் திருமண மண்டபத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் , மாநில பொருளாளர் கவின்சங்கர் நாடார் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி நாடார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
அவர் பேசுகையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி நுழைவாயிலுக்கு பெருந்தலைவர் காமராஜர் வளைவு என பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் முத்துசாமி , திமுக நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் , ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி , கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் நாகராஜ் , கோபி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நன்றி கூறினார் .
மிக முக்கிய கோரிக்கையான மாவீரன் கொங்கு குணாளன் நாடாருக்கு அரசு விழா அறிவித்து மணிமண்டம் அமைக்க வேண்டும். உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் மீதும் நேர்மையான உழைப்பின் மூலம் முன்னேறிய நாடார் சமுதாய மக்கள் மீதும் அவதூறு பரப்பிய youtube ஊடகவியலாளர் முக்தர் அகமது என்பவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து கைது நடவடிக்கை செய்ய வேண்டும் .வருகின்ற 2026 தேர்தலில் திமுக , அதிமுக இரண்டு கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் நாடார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளராக அறிவிக்க வேண்டும் .
சங்கத்தின் சார்பாக பிப்ரவரி மாதத்தில் கொங்கு மண்டலம் மட்டுமல்ல தமிழகத்தின் ஒட்டுமொத்த நாடார் சமுதாய மக்களையும் அழைத்து மாபெரும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படும்.
மேலும் சங்கம் கடந்த ஐந்தாண்டுகளாக சங்கத்தின் வளர்ச்சிக்காக சிறப்பான முறையில் தங்களது கடின உழைப்பை வழங்கிய மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு நன்றி கூறி அவர்களுடைய உழைப்பையும் தியாகத்தையும் பாராட்டி கௌரவித்தார் .
இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி தலைவர் சோளி. சந்திரசேகரன் நாடார் மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் மாநிலத் துணைச் செயலாளர் அய்யாசாமி நாடார், தலைமை நிலைய செயலாளர் பொன்மணி நாடார் , மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் இளங்கோ நாடார் , விக்னேஸ்வரன் நாடார் , மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் கௌரிசங்கர் நாடார், துணைத் தலைவர் சரவணபிரபு நாடார், துணை செயலாளர் கலைவாணன் நாடார், மாநில உயர்மட்ட குழு ஆலோசகர்கள் முத்துசாமி நாடார் ,வசந்தம் பழனிச்சாமி நாடார் , தேங்காய் செந்தில் நாடார், சுப்பிரமணியம் நாடார், ரயில்வே ரஞ்சித் நாடார், பொள்ளாச்சி பெரியசாமி நாடார் ,பரமசிவம் நாடார் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி நாடார் தலைமையில் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி நாடார் தலைமையில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி நாடார் தலைமையில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி நாடார் பொருளாளர் பாலுசாமி நாடார் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நாடார் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கோவை வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட துணை தலைவர் முத்துசாமி நாடார் தலைமையில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் வரதராஜன் நாடார் தலைமையில் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் பூபதி நாடார் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள், சென்னிமலை ஒன்றிய பொருளாளர் சுந்தரம் நாடார் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள், ஈரோடு ஒன்றிய தலைவருக்கு கேபிள் ஈஸ்வர நாடார் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள், கோபி ஒன்றிய பொறுப்பாளர் கௌரி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள், மகுடஞ்சாவடி ஒன்றிய நிர்வாகிகள், கோபி நகர தலைவர் மணிகண்டன் நாடார் தலைமையில் நகர் நிர்வாகிகள் நம்பியூர் ஒன்றிய நிர்வாகிகள் ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தண்டபாணி நாடார் குண்டடம் கொடுவாய் ஒன்றிய நிர்வாகிகள், நம்பியூர் ஒன்றிய நிர்வாகிகள் அன்னூர் ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி துணைத்தலைவி பூங்கொடி நாடார், தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி ஊராட்சி நிர்வாகிகள் 300 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.







0 Comments