தேனி: வடுகபட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்


தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நிறைவடைந்தன. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கும் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர்  பாண்டியராஜ், விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கேடயங்கள் வழங்கி வாழ்த்தினார். 

போட்டியில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மருத்துவர் பாண்டியராஜ்  சால்வை அணிவித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை

பேரூராட்சி தலைவர் நடேசன்  மிகவும் திறம்படச் செய்திருந்தது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments