ஈரோடு மாவட்டம் ( SDAT V.O.C பூங்காவில் ) - இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்த்ரா ஈரோடு மாவட்டம் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், ஒன்றியங்களை சேர்ந்த ஆண்களுக்கு குழு விளையாட்டு போட்டியாக வாலிபால் மற்றும் பெண்களுக்கு குழு விளையாட்டு போட்டியாக கயிறு இழுத்தல் தனிநபர் விளையாட்டுப் போட்டியாக இருபாலருக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மை பாரத்துக்கு கேந்திரா ஈரோடு மாவட்ட A.P.A மகேஷ் குமார் மற்றும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை சான்றிதழ் வழங்கினார்கள். ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார் மற்றும் மை பாரத் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வினை சிறப்பாக நடுவர் அமைத்து நடத்திக் கொடுத்தது அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம் என்பது குறிப்பிடத்தக்கது. மை பாரத் கேத்ரா தன்னார்வலர்கள் சௌந்தர்யா, துர்கா, இலக்கியா, தமிழ்வாணன், அகிலேஷ் & குணசேகரன் அனைவரும் ஒருங்கிணைத்தத்தனர். நடுவர்கள் தேவதர்ஷினி, மணிகண்டன், ரோகித், மதன்குமார், ஹரிபிரசாத் ஆகியோர் அவர்களது பணியை சிறப்பாக செய்து முடித்தனர் என்று அனைவரும் பாராட்டினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.








0 Comments