தேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரை பொதுக்கூட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் தேனி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திக மாவட்ட காப்பாளர் ச.ரகு நாகநாதன் தலைமையேற்க திகமாவட்ட செயலாளர் பூ மணிகண்டன் வரவேற்க திக மாவட்ட தலைவர் ம.சுருளிராசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.திராவிடக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மே.மதிவதனி தொடக்கவுரையாற்றினார்.தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி விழா பேருரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன்,திமுக நகரச் செயலாளர் நாராயண பாண்டியன், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, மாதிமுக மாவட்ட செயலாளர் V.S.K.ராமகிருஷ்ணன்,சிபிஐ மாவட்ட நிர்வாகி ராஜ்குமார்,SDPI மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்லா பத்ரி,வெல்ஃபேர் கட்சி மாவட்ட தலைவர் முகமது சபி,ஆதி தமிழர் கட்சி மாவட்ட தலைவர் முல்லை அழகர்,மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், விசிக நகர செயலாளர் ஈஸ்வரன், தேனி சமூக நல்லிணக்க பேரவை தலைவர் அன்பு வடிவேல் மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் பூமிநாதன், திராவிட புரட்சி கழக நிர்வாகி தலித் ராயன்,திராவிட கழக பேச்சாளர் சே கண்ணன்,தமிழ் புலிகள் கட்சி பாலா, திக மாவட்ட துணைச் செயலாளர் லோ.முத்துசாமி, திக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வின் நிறைவாக, போடி பெரியார்லெனின் நன்றி தெரிவித்தார்.


0 Comments