தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப மாணவிகள் 5 நாட்களாக அனுபவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த அனுபவ பயிற்சியின் போது நேசம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள்,நிறுவன பதிவேடுகள்,மகளிர் சுய உதவி குழு பதிவேடுகள்,தலைமை பண்பு பயிற்சிகள்,குழு விளையாட்டின் மூலம் பயிற்சி அளித்தனர். பின்னர் நேசம் தொழில் திறன் மையத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளிடம் நேரடியாக சென்று கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து பெரியகுளத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளான மணி கார்த்திக்,விஜயகுமார் ஆகியோருக்கு சொந்தமான சோத்துப்பாறை கல்லார் ரோடு பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளுக்குசென்று இயற்கை முறையில் கரைசல் தயாரிப்பு பற்றி செய்முறை விளக்கம் பற்றி கேட்டறிந்தனர். அதேபோல் வடுகபட்டி பேரூராட்சியில் மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரித்து தேவையான உரங்களை சேமிப்பது பற்றி விளக்கம் அளித்தனர்.இந்நிகழ்வின் போது வடுகபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் நடேசன்,பேரூராட்சி செயல் அலுவலர் உமா சுந்தரி,சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை நவீன முறையில் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) சந்தைப்படுத்துவது குறித்து வேளாண் தொழில் நுட்பகல்லூரி மாணவிகளுக்கு வினோரா பவுண்டேஷன் பயிற்றுனர் காளீஸ்வரி விளக்கமளித்தார்.இந்த 5 நாட்கள் அனுபவ பயிற்சியை நேசம் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் முருகன்,பயிற்றுநர் ராதிகா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.அனுபவ கள ஆய்வு பயிற்சியில் குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் 14 பேர் கலந்து கொண்டனர்.பயிற்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு நேசம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கினர்.



0 Comments