கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டி.? நடிகை பாவனா விளக்கம்


 தமிழில் "சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல்" போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகை பாவனா ஆளுங்கட்சியான சிபிஐ(எம்) கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து, 'அனோமி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாவனா, "யார் இப்படி எல்லாம் ஒரு கதையை உருவாக்கி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. இதைக் கேட்ட போது எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Post a Comment

0 Comments