தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..... கலெக்டர், எம்பி பங்கேற்பு




தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து  பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஞ்ஜீத்சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன்  முன்னிலையில்  தண்ணீரை திறந்து  வைத்தார்கள்.

 தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி,  மஞ்சளாறு அணையிலிருந்து  (13.01.2026) முதல் 17.01.2026 வரை  5 நாட்களுக்கு   வினாடிக்கு  200 கனஅடி  வீதம்  மொத்தம் 86.40 மில்லியன் கன அடி தண்ணீர்,  நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமங்கள் மற்றும்  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய கிராமங்களைச் சுற்றி  உள்ள  பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும்,  பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் அன்பரசன்,  உதவிப் பொறியாளர்கள் தளபதி ராம்குமார்,  கமலக்கண்ணன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments