அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட அமைப்பு செயலாளர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.மாநிலபிரச்சார செயலாளர் துரை.சரவணன், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் ஹரி பாஸ்கர், மாநில பொருளாளர் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துரை மற்றும் நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்தல்,சங்க செயல்பாடுகள் குறித்த விவாதித்தல், ஓய்வு பெற்ற பணியாளர்களின் பணிகளை பாராட்டுதல், பதவி உயர்வு பெற்ற பணியாளர்களை கெளரவித்தல், அனைவருக்கும் சங்க 2026 மாதாந்திர நாட்காட்டி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் ரீகன் நன்றி கூறினார்.



0 Comments