திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார், இ.கா.ப., அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, இன்று (07.01.2026) திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வி.வி பொறியியல் கல்லூரி NSS மாணவர்களின் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பேரணியை திசையன்விளை காவல் ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங் மற்றும் வள்ளியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சாலை விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த பேரணியின் நோக்கமாகும்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிமுறைகளை பின்பற்றுதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட விழிப்புணர்வை மாவட்ட முழுவதும் ஏற்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை அறிந்து அவைகளை முழுமையாக பின்பற்றியும் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறியும் விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
இப்பேரணியில், போக்குவரத்து காவலர்கள், திசையன்விளை காவல் நிலைய ஆளிநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழிப்புணர்வு பேரணியானது திசையன்விளை ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கிலிருந்து புறப்பட்டு திசையன்விளை காவல் நிலையம் வரை சென்று முடிவடைந்தது.

0 Comments