நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகப்பட்டினத்தில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாரத்தான் போட்டியினை, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை,மாலி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளாக 8, கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள் சளைக்காமல் நீண்ட தூரம் உற்சாகத்துடன் ஓடி வந்தனர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கைதட்டி அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்தினர்.
மாரத்தான் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், ஊக்க தொகையுடன் கூடிய பரிசு மற்றும் சான்றிதழ் கேடயங்களை அக்கரைப்பேட்டை கிராமத்தினர் வழங்கி பாராட்டினர்.
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி



0 Comments