திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா...... அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்து திருவுருப்படத்திற்கு மரியாதை......

 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிமுக மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராஜா வடிவேல் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு சிங்கம்புணரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு ஆகியோர் முன்னிலையில், நகரச் செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன் கலந்து கொண்டு  காந்தி சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 



அதன்பிறகு அங்கிருந்து அதிமுகவினர் பேருந்து நிலையம், மதுரை ரோடு வழியாக அண்ணா சிலை வந்தடைந்து அங்கும் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு பொதுமக்கள் மற்றும் சாலையில் பயணித்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாசறை மாநில துணைச் செயலாளர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செல்லப்பாண்டி உட்பட ஏராளமான நிர்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.                                  

Post a Comment

0 Comments