இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்களின் விருப்பத்தை நிலைநாட்டிட பழைய நகராட்சி கட்டிடம் பாதுகாக்கப்பட வேண்டி நகர் தலைவர் முஹம்மது ஜலீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,நகர் செயலாளர் கீழை அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார்,சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது உட்கட்டமைப்பு பற்றிய விரிவாக விவரித்தார்கள்,சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் ஜஹாங்கீர் அரூசி சோசியல் மீடியா உபயோகிப்பது சம்பந்தமாக தெளிவாக விளக்கினார்கள்.
கீழக்கரை நகராட்சி புதிய கட்டிடம் கேள்விக்குள்ளாகும் மக்கள் நலன்?SDPI_கட்சி_அறிக்கை:கீழக்கரை புதிய கட்டிடம் சர்ச்சை காரணமாக தொடரும் விரும்பத்தாகாத செயல்களை SDPI கண்டிக்கிறது.கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக செல்லவில்லை.
கீழக்கரை நிர்வாகம் பதவி ஏற்ற நாள் முதல் இப்போதைய நகராட்சி புதிய கட்டிடம் சர்ச்சை வரை தெளிவில்லாத நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருவதை SDPI கண்டிக்கிறது.
நகராட்சி பணிகள் செய்ய தற்போதைய அலுவலகத்தில் போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தால் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நகராட்சி கட்டிடம் கட்ட முன்பே நகர்மன்றத்தால் முடிவெடுக்கப்பட்ட செய்திகள் இதுவரை நகர்வாழ் மக்களுக்கே தெரியாது.
நகராட்சி நிர்வாக கட்டிடத்தை இடித்துவிட்டு அதை கட்டுவதற்கு நிதி வேண்டும் என்கிற நகர்மன்ற தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசும் நிதி ஒதுக்கி பின்னர் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தற்போதைய கட்டிடத்தை இடிப்பதற்கு அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அறிந்து மக்களும் ,ஊர் பெரியோர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.கிட்டதட்ட 50ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் நகராட்சி கட்டிடத்தை இடிக்கவேண்டிய தேவை உள்ளதா?
அப்படி ஒரு பரந்த கட்டிடம் தேவை என்றால்,தற்போதைய கட்டிடத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாம்.பலதரப்பு மக்களையும் அழைத்து கருத்துகேட்பு நடத்தியிருக்கலாம்.
ஏற்கனவே அரசு சார்ந்த அலுவலக தொடர்புகளுக்கு கீழக்கரை மக்கள் மிகவும் சிரமப்பட்டுவரும் நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் அவசரகதி தீர்மானத்தால் மேலும் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
நகராட்சி கட்டிடத்தை இடிக்ககூடாது என்று தொடரும் மக்கள் எதிர்ப்பால் புதிய கட்டிடத்தை ஊருக்கு வெளியே அமைத்து மக்களை சிரமப்படுத்தும் மோசமான சூழல் உருவாகுவது கீழக்கரை நகராட்சி மக்களுக்கு செய்யும் அநீதி.
இச்செயல் வாக்களித்து வெற்றி பெறச் செய்த கீழக்கரை மக்கள் நலன் மீது அக்கரை இல்லாத போக்கையும்,நகர்மன்ற நிர்வாகத்தின் அனுபவமில்லா அவசரத்தன்மையையும் காட்டுகிறது.இந்நிகழ்வில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் நூருல் ஜமான், தொகுதி துணை தலைவர் தாஜூல் அமீன், நகர் துணை தலைவர் ஹாஜா அலாவுதீன், பாரூக் மாமா,நகர் இணை ஹமீது பைசல், செயற்குழு உறுப்பினர்கள் சுல்தான் சிக்கந்தர், சாதிக் அலி, அஹமது நதீர் ஆகியோர் உடனிருந்தனர்.


0 Comments