கமுதி பேரூராட்சியில் நடைபாதையில் கழிவுநீர் தேங்குவதால் பள்ளிமாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சியில் 9 வது வார்டு தெற்குமுதுகுளத்தூர் ரோடு சாலையின் ஓரத்தின் கட்டப்பட்டுள்ள வாறுகாலில் கமுதி நகரின் ஒருபகுதி கழிவுநீர் இதிலேவரும் ஊரின் கடைசி பகுதியில் உள்ள மயானத்திற்கு கிழக்கு பகுதியில் வாறுகாலில் இருந்து ஓடையாக வந்து கழிவுநீர் குட்டையாக. சுமார் நாற்பது வருடமாக  கிடந்துவந்தது  தற்போது அந்த பகுதியில் ஒருவருடத்திற்கு முன்புவரை பேரூராட்சியால் குப்பைகொட்டிவந்த பகுதி எல்லாம் நிறைந்து  முதுகுளத்தூர் போகும் பாதையில் ஆக்கிரமித்தல் செய்து கம்பிவேலி போட்டு அடைத்தை வைத்து இருக்கும் பகுதியை தாண்டி சிறிய நடைபாதையில் கழிவுநீர் வந்து தேங்குகிறது.

 இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது இதனால்  அந்தபகுதியில் இருந்து வரும் மாணவர்கள் பொதுமக்கள் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது மேலும் காலரா தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் நலன் முக்கியமானது ஆகவே மாவட்டநிர்வாகம் தூரித நடவடிக்கை எடுத்து  கழிவுநீரை பூமியே உருஞ்சும் வகையிலான அமைப்பை செய்து இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த பகுதி பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments