நாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முட்டம் தொழில் அதிபர் அப்பாராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனோகரன், சூரியகாந்தி, விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விழா குழு செயலாளர் பகு வரவேற்றார்.
ஆசிரியர் சலோமி ஸ்டீபன் கிரிஜா ஆண்டறிக்கை வாசித்தார். இதில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளிக்கு முன்னால் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து பள்ளி சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோடி நன்றி உரை ஆற்றினார்.
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி




0 Comments