திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரணி பேரூர் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி பேரூர் செயலாளர் ராஜசேகர் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.சங்கர் ராஜா கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயத்து மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ், ஆரணி பேரூர் நிர்வாகிகள் வெங்கடேசன், லோகநாதன், சிவரஞ்சனி, சரண்யா, சென்பகவல்லி, மல்லீஸ்வரராவ், ராதாகிருஷ்ணன், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் சரவணன், அதிமுக நகரச் செயலாளர் ஏ.எம்.தயாளன், துளசி, ரவி,ஆர்.ரவி, முரளி,டில்லி, வெங்கடேசன்,விஜயா,மோகன், பாமக குமரேசன்,பிஜேபி முனுசாமி, புரட்சி பாரதம் பாஸ்கி,டேவிட், மற்றும் கூட்னணி கட்சி நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.


0 Comments