இராமநாதபுரம் மாவட்ட என்.எஸ்.எஸ் தொடர்பு அலுவலருக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் பாராட்டு

 


தமிழ்நாடு பள்ளிகல்வி துறையின் கீழ்மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணிதிட்ட அலகுகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் முகாமை ஒரே கட்டமாக சிறப்பாக நடத்திய ராமநாதபுரம் மாவட்ட தொடர்பு அலுவலர்களுக்கு புதுக்கோட்டையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் . கண்ணப்பன்  தலைமையிலும், நாட்டுநலப்பணித்திட்ட இணை இயக்குனர்  சாந்தி  முன்னிலையில் ஆய்வுக்கூட்டமும் , பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

 வருகைதந்த அனைவரையும் என்.எஸ்.எஸ் மாநில தொடர்பு அலுவலர்கள்                      தயாளன்  சௌந்தர்ராஜன்  ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில்  பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக முகாமை வழிநடத்தி முடித்த இராமநாதபுரம் மாவட்ட நாட்டுநலப் பணி திட்ட மாவட்ட தொடர்புஅலுவலர் மங்களநாதனுக்கு  பாராட்டு சான்றிதழ் மற்றும் என்.எஸ்.எஸ் லோகோ பொறித்த டி-சர்ட் வழங்கி வாழ்த்தினார்கள் இறுதியில் புதுக்கோட்டை மாவட்ட தொடர்புஅலுவலர்     .குமார் நன்றி கூறினார்

Post a Comment

0 Comments