சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்டது, கண்டணூர் பேரூராட்சி, இந்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது கவுல் கொல்லை என்ற பகுதியாகும். இந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், இங்கு வசிப்பவர்கள் இறப்பு நேரிட்டால் அருகே உள்ள சுடுகாட்டிற்கு, ரயில்வே இருப்புப் பாதை இரும்பு கேட்டின் வழியே எடுத்துச் செல்வது வழக்கம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருப்புப் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட் அகற்றப்பட்டது.
இதனால் தற்போது இறப்பவர்களில் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது பாதுகாப்பாற்ற முறையில், ஆபத்தான முறையில் எடுத்துச் செல்வதாகவும், இதுகுறித்து ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என்று வேதனையோடு தெரிவிக்கும் அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இனி இறந்தவர்கள் உடலை பேரூராட்சி மன்ற வாசலில் வைக்கப் போவதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர், என்னதான் அரசு மக்களுக்கு தான் என்று பேசி வந்தாலும், அரசு அலுவலர்கள் சரிவர வேலை செய்யாமல் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதே அவர்களில் வேதனையில் தெரியவந்தது.

0 Comments