திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உதயகுமாரின் செல்போனில் தவறான பதிவுகள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

0 Comments