இராமநாதபுரம் மாவட்டம்,அபிராமம் பேரூராட்சியில் உள்ள அபிராமம் பத்திரப்பதிவு புதிய கட்டிடஅலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கு ஏற்றி விழாவைதுவக்கி வைத்தார்.
இதில்திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,அபிராமம் பேரூராட்சி தலைவரும்,பேரூர் கழக செயலாளருமான ஜாகிர்உசேன்,துணைத் தலைவர் மாரி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ் செல்வி போஸ், வட்டாட்சியர் ஸ்ரீராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காவடிமுருகன், மணலூர் ராமர், பாண்டி, பத்திரப் பதிவு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments