ராமநாதபுரம்: ஆப்பனூர் முளைகொட்டுத் திருவிழா தொடக்கம்

            




ராமநாதபுரம் மாவட்டம்  கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் கிராமம் சார்பாக அரியநாயகி அம்மனுக்கு மாசா திருவிழா ஒருமாதம் கொண்டாடப்படுவது வழக்கம் இதன்படி மாசி மாத முதல் செவ்வாய்கிழமையில் முள்ளிச்செடி எனப்படும் முளைப்பாரி ஊன்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

  ஆப்பனூர் அருகே முள்ளிச்செடி எடுக்கப்பட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் பால் பன்னீர் இளநீர் உள்பட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டன பிறகு பாரம்பாரிய இசைவாத்தியங்கள் முழங்க முள்ளிச்செடியை ஊர்வலமாக எடுத்து வந்து இரவில் ஆப்பனூரின்  மையப்பகுதியில் அமைந்துள்ள முளைக்கெட்டு மையத்தில் ஊன்றி கிராமமக்கள் வழிபாடு செய்தனர் இதில் சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் இந்த முள்ளிக்கு தினந்தோறும் சிறப்புபூஜைகள் நடைபெறும் பெண்கள் இரவில் கும்மியடித்தும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் திருவிழாவை ஒருமாதம் கொண்டாடுவார்கள்.

Post a Comment

0 Comments