தேனி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. மேலும் கலைநிகழ்ச்சிகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர் செல்வராஜ், ஆசிரியர்கள் கென்னடி, சக்தி, சுரேஷ், ஜமின்தார், அர்ச்சுனன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழி, உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments