ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆதியாகுடி கிராமத்துக்கு செல்லும் விளக்கு பகுதியில் கிராம மக்களால் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்துகளைக் குறைக்கும் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, அந்தப் பகுதி கிராம மக்கள் தங்களது சொந்தப் பொறுப்பிலும், கிராமப் பொது நிதியிலிருந்தும் நிதி திரட்டி நவீன சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
கிராம மக்களின் இந்தச் சிறப்பான முயற்சியால் நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமரா அமைப்பினை, திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்பிரபு நேரில் வந்து திறந்து வைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.
இந்தத் தொடக்க விழாவில் கிராம மக்களும், காவல்துறையினரும் கலந்து கொண்டனர். கிராம மக்களின் இத்தகைய விழிப்புணர்வும், பாதுகாப்புக்கான கூட்டு முயற்சியும் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

0 Comments