கும்மிடிப்பூண்டி சிப்காட் நச்சுப்புகையால் பாதிக்கப்படும் மக்களை காக்க பசுமையாக மாற்ற சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்...... தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் பேச்சு......



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக,அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொருளாளர் கிருபாகரன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். விஜயகுமார் கலந்து கொண்டு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கியும், தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ விஜயகுமார் கடந்த பல ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக, அதிமுக கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காததன் பேரில் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சரமான விஜயின் ஆட்சியில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் சுமார் பத்து லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளதாகவும், இந்த தொகுதியை நோயில்லா பசுமை தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.



முன்னதாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்து பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர். கிருபாகரன் கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் விஜய் பழனி. ஒன்றிய செயலாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments