பரமக்குடி அரசுகலைக் கல்லூரி வகுப்பறை கட்ட முதல்வர் காணொலியில் அடிக்கல் நாட்டினார்

              


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் ரூபாய் 472.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஒன்பது வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார் நிகழ்வில்  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)திவ்யான்ஷுநிகம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்  கலந்து கொண்டார்.

உடன் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜா மற்றும் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி ,பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புகண்ணன்  முத்துராமலிங்கம், பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments