கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பயணிகள் நிழற்குடை கட்டிதரகோரிக்கை


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அமைந்துள்ள பயணியர் நிழற்குடை கடுமையாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையை நம்பி தினந்தோறும்  பதினான்குக்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து  நானூறுக்கும் அதிகமானமாணவிகள்  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துக்காக இதில்  காத்திருக்கின்றனர்.

பழைய நிழற்குடையின் இரும்பு கம்பிகள் முறிந்து, சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. மழை, வெயில் நேரங்களில் மாணவர்கள் திறந்த வெளியில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது இதனால் பொதுமக்கள்  சிரமப் படுகின்றனர்.

இதுவரை பழுதடைந்த பகுதிகளை தற்காலிகமாக மட்டும் சரிசெய்ததாகவும் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான நிரந்தர நடவடிக்கை  எதும் எடுக்கப்படவில்லை  பள்ளி முன்பு புதிய நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில்,மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக பழைய நிழற்குடையை அகற்றி புதிய பயணியர் நிழற்குடையை கட்டித் தர வேண்டும்” என ஊராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பயணியர் நிழற்குடை அமைத்துதர வேண்டும்.

Post a Comment

0 Comments