நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 163 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கிடங்குகளுக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ள பட்டுள்ளது.இதற்காக லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்றி கிடங்குகளுக்கு கொண்டு சென்றால் அங்கே ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மூட்டைகளை இறக்குவதற்கு காலதாமதம் ஆவதாகவும் இது குறித்து நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டால் டிராக்டர் மூலம் நெல் மூட்டைகளை எடுத்து செல்லும் வேலையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக கூறி புத்தூர் ரவுண்டான அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நெல் மூட்டைகளுடன் சாலைகளில் நிற்கும் லாரிகள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டில் பேச்சு வார்த்தைக்கு வந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


0 Comments